*அளவீடு செய்ய நினைக்கும் நிலம் மாநகராட்சிக்கு உட்பட்டதாக இருந்தால் மாநகராட்சி ஆணையரை அணுக வேண்டும். மாநகருக்கு என்று தனி* *சர்வேயர்கள் உண்டு. இதற்கு செட்டில்மென்ட் சர்வே என்று பெயர்*.
*நகராட்சிக்கு உட்பட்ட நிலம் என்றாலும் மேலே சொன்னது* *போலத்தான் விண்ணப்பிக்க* *வேண்டும்*.
*பேரூராட்சி என்றால் அதற்கு E. O எனப்படும் செயல் அலுவலரை அணுக வேண்டும்*. இங்கேயும் நில அளவையர்கள் இருப்பார்கள். இவர்களுக்கு ஸ்டீரிட் சர்வேஎன்று வழக்கத்தில் சொல்வார்கள்.
கிராமப் பகுதிகளில் என்றால் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். முன்பெல்லாம் அரசு கருவூலத்தில் பணம் செலுத்தினால் நிலத்தை அளந்து தருவார்கள். தற்போது அனைத்தும் வங்கி மயமாகிவிட்டது. வங்கியில் தான் பணம் கட்ட வேண்டும்.
ஒரு சர்வே எண்ணில் எத்தனை உட்பிரிவுகள் வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்கு ஏற்றார் போலத்தான் பணம் கட்ட வேண்டும். ஒரு உட்பிரிவுக்கு ரூ. 40/- என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்போது உங்கள் சர்வே எண் 16 என்று வைத்துக் கொள்ளுங்கள். 16ல் உட்பிரிவுகளாக 2, 3, 2A, 3A, 4A, 5A என இருக்கிறது. இந்த நிலங்கள் எல்லாம் ஒருவருக்கே சொந்தமானது என்றால், ஆறு உட்பிரிவுகளுக்கும் சேர்த்து ரூ. 240/- கட்ட வேண்டும். இதை வங்கி செல்லான் மூலம் வங்கியில் செலுத்த வேண்டும். இந்த செல்லானை கட்டாயமாக விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன், வங்கி செல்லான், கிரையப் பத்திரம், மூலப் பத்திரம், பட்டா ஆகியவற்றை இணைக்க வேண்டும். தாசில்தாருக்கு அல்லது ஆணையருக்கு அல்லது செயல் அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும். அவர் மனுவை பரிசீலித்து சர்வேயருக்கு அனுப்பி வைப்பார்.
15 நாட்களுக்குள் நிலத்தை சர்வேயர் அளந்து தர வேண்டும். அளவீடு சரியாக இருக்கிறதா? வேறு ஏதாவது பிரச்சனைகள் இருக்கிறதா? என்பதை சொல்ல வேண்டும். அதற்கு அடுத்த 15 நாட்களுக்குள் நிலத்தை பிரித்து அளந்து, அதற்கான அத்தாட்சியை சம்மந்தப்பட்ட நபருக்கு கொடுக்க வேண்டும்.
நிலத்தை அளப்பதற்கு முன்பாக சம்மந்தப்பட்ட நபருக்கும், சுற்றி இருப்பவர்களுக்கும் அறிவிப்பு கொடுக்க வேண்டும்
மத்திய அரசு பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டம் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதி உதவி திட்டம்.
அறிய :- இங்கு கிளிக் செய்யவும்
நன்றி தமிழ்நாடு அரசு |
உங்களுக்கு பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும்
- பொருட்களின் விபரம் (இருப்பு மற்றும் வழங்கப்பட்ட பொருட்கள்)
- மொத்த குடும்ப அட்டைகள்
- மொத்த ஆதார் பதிவு எண்கள்
- மொத்த மொபைல் பதிவு எண்கள்
- வாடிக்கையாளர்கள் (பயனர்கள்)
- கடை பொறுப்பாளர்
- செயல்பாட்டு வகை
- தொடர்பு எண்
- ஏஜென்சி
- கடை முகவரி
- வேலை நேரம்
- தீர்க்க வேண்டிய பொது மக்களின் குறைகள்
- தீர்க்கப்பட்ட பொது மக்களின் குறைகள்
மேலும் பல பொது விநியோகத் திட்ட விபரங்களை அறிய வேண்டுமா?
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மேற்கூறிய விபரங்களை அறிந்துக்கொள்ளலாம் -
வலைத்தளம் - பொது விநியோகத் திட்டம் பொது விநியோகத் திட்டம் : https://www.tnpds.gov.in
தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டம், ஆண்டு 1994, பிரிவு 112, பஞ்சாயத்து ஒன்றியத்தின் கடமைகளும் பணிகளும் வரையறுத்துள்ளது.
அவைகளில் சில;
பஞ்சாயத்து ஒன்றியத்தின் சாலைகள் கட்டுமானம், பராமரிப்பு & மராமத்துப் பணிகள் மேற்கொள்தல்.
குடிக்க, குளிக்க, வெளுக்க தேவையான நீர் வினியோக கட்டுமானப் பணிகள் மேற்கொள்தல்.
ஆரம்ப & நடுநிலைப் பள்ளிக்கூடங்கள் கட்டுதல் மற்றும் பராமரித்தல்
பொதுச் சந்தைகள் கட்டுதல் மற்றும் அதை பராமரித்தல்
இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுகளின் கிராமப்புறத் திட்டங்களை நிறைவேற்றுதல்.
மலேரியா மற்றும் காலரா போன்ற தொற்று நோய்களை பரவாமல் தடுத்தல் மற்றும் மருத்துவ சிகிச்சை அளித்தல்.
ஊராட்சி மன்றங்களின் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்தல்.

நிதி ஆதாரங்கள்
பஞ்சாயத்து ஒன்றியங்கள் எவ்வித வரியை பொதுமக்களிடமிருந்து வசூலிக்க இயலாது. எனவே வரியற்ற சில கட்டணங்கள் வசூலிக்கிறது. அவைகள்;
பஞ்சாயத்து ஒன்றியங்கள் எவ்வித வரியை பொதுமக்களிடமிருந்து வசூலிக்க இயலாது. எனவே வரியற்ற சில கட்டணங்கள் வசூலிக்கிறது. அவைகள்;
வணிக நிறுவனங்களுக்கான உரிமக் கட்டணம், சந்தைக் கட்டணம், அபராதக் கட்டணம் மற்றும் வாடகை வருவாய்.
தமிழ்நாடு அரசிடமிருந்து ஒதுக்கப்பட்ட மற்றும் பகிர்வு வருவாய் (Assigned & shared revenues): தமிழ்நாடு அரசு வசூலிக்கும் முத்திரைக் கட்டணம் மற்றும் கேளிக்கை வரி மீதான கூடுதல் வரிகளில் (Surcharge) ஒரு பங்கு பஞ்சாயத்து ஒன்றியங்களுக்கு, மானியங்கள் வழங்கல் விதிகளின் படி, மாநில அரசு நிதி வழங்குகிறது. சுரங்கங்கள் மற்றும் கனிம வளங்களிலிருந்து தமிழ்நாடு அரசிற்கு வரும் வருவாயில் ஐம்பது விழுக்காட்டுத் தொகையை, பஞ்சாயத்து ஒன்றியங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

மானியங்கள்
பஞ்சாயத்து ஒன்றியப் பகுதிகளில், மகப்பேறு மருத்துவ மனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கத் தேவையான நிதிக்கு, தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய அரசு வழங்கும் மானியத் தொகைகளை, தமிழ்நாடு அரசின் மாநில நிதிக் குழு (State Finance Commission) பஞ்சாயத்து ஒன்றியங்களுக்கு வழங்குகிறது.

செலவிடும் அதிகாரம்
பஞ்சாயத்து ஒன்றியக் குழுவிற்கு, ஒரு பணியை நிறைவேற்ற, அதிக பட்சமாக ரூபாய் பத்து இலட்சம் வரை ஒன்றியத்தின் பொது நிதியிலிருந்து செலவு செய்து கொள்ள அதிகாரம் உள்ளது. இதற்கு மேலிட அனுமதி தேவையில்லை.
பஞ்சாயத்து ஒன்றியக் குழுவிற்கு, ஒரு பணியை நிறைவேற்ற, அதிக பட்சமாக ரூபாய் பத்து இலட்சம் வரை ஒன்றியத்தின் பொது நிதியிலிருந்து செலவு செய்து கொள்ள அதிகாரம் உள்ளது. இதற்கு மேலிட அனுமதி தேவையில்லை.
ரூபாய் பத்து இலட்சம் முதல் 50 இலட்சம் முடிய செலவினங்களுக்கு, மாவட்ட ஆட்சியரியன் அனுமதியும், 50 இலட்சத்திற்கு மேற்பட்ட செலவினங்களுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (Rural development and Paன்chayat raj Department) இயக்குனரின் அனுமதி தேவை. இருப்பினும் இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் திட்ட ஒதுக்கீடு நிதிகளை செலவிட மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறவேண்டும்.
1, ஜனாதிபதி தவறு செய்தால்கூட 60 நாள் நோட்டீஸ் கொடுத்து சிவில் வழக்கு தொடரலாம். Article 361(4)
2, நீதிபதி தவறு செய்தால் 7 வருடம் சிறை. IPC-217
3, நீதிபதியை எதிர்மனுதாரராக சேர்த்து அப்பீல் செய்யலாம். CRPC 404
4, அரசு அலுவலர், அரசு மருத்துவர், காவல் அலுவலர், பணியின் போது கடமையிலிருந்து தவறுதல் 1 வருடம் சிறை. IPC-166
5, எழுத்துக்கூட்டி வாசிக்கத்தெரிந்த எந்த பாமரனும் இந்தியக் குடிமகன் எவரும் தாய்மொழியில் சட்டம் படிக்கலாம்.
6, சட்டம் படித்த பாமரன் எவரும் வழக்கறிஞரின் உதவி இல்லாமல் தங்கள் வழக்கில் தாங்களே வாதாடலாம். Article 19(1) , CRPC 303,302(2)
7, வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கலாம். CRPC 309(2) 312.
8, இந்தியாவில் எந்தவொரு அலுவலகத்திலும் ஆவணம் மற்றும் சான்றிதழ் தாய்மொழியில் கேட்டு பெறலாம். அதற்கான சட்டப்படியான செலவுத்தொகை செலுத்த வேண்டும். IEA-74,76-ன் கீழ்
எவர் ஒருவரும் பார்வையிடலாம்.
எவர் ஒருவரும் பார்வையிடலாம்.
9, இந்திய குடிமகன் எவரையும் எவர் தாக்கினாலும் (CRPC -4 படியிலான சங்கதிகள் தவிர) 3-ம் நபர் கைது செய்து சிறையில் வைக்கலாம். சட்டையை கழற்றி விடலாம். CRPC-43
10, ஒரு குற்றம் நடைபெறும் முன்பு நடைபெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு காவல் உயர்நிலை அலுவலர்களுக்கும் கீழ்நிலை அலுவலர்களுக்கும் கட்டுப்பாடு உண்டு. CRPC 36, 149.
11, காவல்நிலையம் மற்றும் நீதிமன்றம் இவற்றிலிரிந்து யாருடைய தயவும் இல்லாமல் சொந்த ஜாமினில் வெளியே வரலாம். செலவு ஐந்து ரூபாய் மட்டுமே. Article 21(2)
12, கிரிமினல் மற்றும் சிவில் வழக்கு எத்தனை வருடம் நடந்தாலும் செலவுத்தொகை ரூபாய் 500லிருந்து 1000 வரை மட்டுமே பெறலாம். அதீதமான சூழ்நிலையில்தான் வழக்குச் செலவு கூடும். பொய்வழக்கு தாக்கல் செய்தால் IPC-211-ன்படி 2 வருடம் சிறை தண்டனை உண்டு. சிவில் வழக்கில் மனுதாரர் பக்கம் நியாயமிருந்தால் Mount தொகை திரும்ப வந்துவிடும். மனுதாரர் பொய் வழக்கு தாக்கல் செய்திருந்தால் 50,000 நஷ்ட ஈடு பிரதிவாதிக்கு தரவேண்டும்.
13, தாலுக்கா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பெற செலவு ரூபாய் 60 மட்டுமே. அதற்காக RIOffice-லும் VAO ஆபீசிலும் தவம்கிடந்து காத்திருக்க வேண்டியதில்லை.
14, காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றால் படித் தொகையும், செலவும் சம்பளத்தொகையும் கேட்டுப்பெறலாம். CRPC.160(2)
15, அதீதமான சூழ்நிலையில் மட்டும் கைவிலங்கிட முடியும் மற்றப்படி அன்று Article 21(14)
16. புகார்மனுவில் பொய்யான வாதம் வைத்திருந்தால் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் Article 32(8)
17, பொய் வழக்கில் சிறைதண்டனை பெற்றிருந்தால் ரத்து செய்து விடலாம்.
18, பொய் என்றும், புனையப்பட்டது என்று தெரிந்திருந்தும் அறிந்திருந்தும் உண்மையைப்போல நேர்மையற்ற முறையில் பயன்படுத்துதல் 7 வருடம் அல்லது 3 வருடம் சிறை தண்டனை உண்டு. IPC 193,196,200.
19, முத்திரையே இல்லாத தராசை கைவசம் வைத்திருந்தாலே ஒரு வருடம் சிறை தண்டனை உண்டு. IPC.267
20, அடுத்தவருடைய அசையும் சொத்தை பொருளை நேர்மையற்ற முறையில் அபகரித்தால் 2 வருடம் சிறை தண்டனை உண்டு..IPC-403
21, குழந்தை உயிருடன் பிறப்பதை தடுத்தல் மற்றும் பிறந்தபின் இறக்கச்செய்தல் பத்து வருட சிறை தண்டனை உண்டு.IPC-315.
22, தற்காப்புக்காக செய்யப்படும் எந்தவொரு செயலும் குற்றமில்லை. IPC-96
23, பிற மதம் நிந்தித்தல் ஆச்சாரம் கெடுதல் 2 ஆண்டு சிறை. IPC-295
24, மத உணர்வுகளை புண்படுத்துதல் ஒரு வருடம் சிறை IPC-295
25, ஆள்மாராட்டம் செய்து ஏமாற்றுதல். 3 ஆண்டு சிறை IPC-419
26, ஏமாற்றும் பொருட்டு போலியாக பத்திரம் தயார் செய்தல் 7வருடம் சிறை. IPC-468.
27, சொத்து அடையாள குறியை மாற்றுதல் 3ஆண்டு சிறை IPC-484
28, கணவன் மனைவி உயிருடன் இருக்கும் போது மறுமணம் செய்தல் 7 ஆண்டுகள் சிறை. IPC-494
29, முந்தைய திருமணம் மறைத்தல் 10 வருடம் சிறை. IPC-495
30, IPC-499 ல் 3 முதல் 9 வரை உள்ள விதிவிலக்கு விதியின்படி யாரையும் விமர்சனம் செய்யலாம். நீதிபதியையும் கூட...
இதில் IPC என்பது இந்தியன் பீனல் கோட் (இந்திய தண்டனைச்சட்டம்)ஆகும்.
மேற்கூரியவைகள் யாவும் என்னுடைய சொந்த கருத்து அல்ல. கருத்து பெறப்பட்ட வலைதளம் -
https://www.facebook.com/advocateselva/posts/779165629155738?__tn__=K-R
மத்திய அரசின் இந்த புதிய உத்தரவை தெரிந்து கொள்ளுங்கள்.
பொறியியல், மருத்துவ பட்டப்படிப்பு, மற்றைய பட்ட மேற்படிப்புகளுக்கு கடன் பெற இனி வங்கி வாசலில் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் காத்திருந்து அலைய வேண்டாம்.
அதற்கு பதிலாக கல்விக்கடனுக்காகவே *‘பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்’* (Pradhan Mantri Vidyalakshmi Karyakram) எனும் இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. *இந்த தளத்தின் மூலமே இனி அனைத்து கல்விக்கடனுக்கான விண்ணப்பங்களும் அனுப்பப்பட வேண்டும்.* மாறாக எந்த வங்கியும் தனிப்பட்ட முறையில் கல்விக்கடனுக்கான விண்ணப்பங்களை பரிசீலிக்க தேவையில்லை என உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி மத்திய நிதி அமைச்சகம் அனைத்து அரசு வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
அனைத்து கல்விக்கடன்களுக்கான விண்ணப்பங்களையும், ‘பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்’ எனும் இணையதளம் வாயிலாகவே பரிசீலனை செய்ய வேண்டும் என ஆணையிட்டுள்ளது.
ஆதலால், இனிமேல் 12-ஆம் வகுப்பு (+2) முடித்த மேற்படிப்புக்கு வசதியில்லாத ஏழை எளிய மாணவ, மாணவிகள் பொறியியல், மருத்துவ பட்டபடிப்புக்கும், பட்டமேற்படிப்புகள் படிக்கவும் கடன் பெற வங்கியில் வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை.
இந்த ‘பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்’ எனும் இணையதளத்தில் சென்று, அதில் உள்ள கல்விக்கடனுக்கான விண்ணப்பத்தில் கேட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து, எந்த வங்கி மூலம் கல்விக்கடன் வேண்டும் என்ற தகவலையும் தெரிவித்து அதை அனுப்பிவைக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் முறைப்படி பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு, கல்விக்கடன் குறித்த அழைப்பு வங்கி மூலம் சம்பந்தப்பட்ட மாணவருக்கு கடிதமாக அனுப்பப்படும். இந்த திட்டம் இந்த ஆண்டிலிருந்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

“ ‘பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்’
https://www.vidyalakshmi.co.in/Students எனும் இணையதளத்தின் மூலமே அனைத்து கல்விக்கடன்களுக்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட வேண்டும்" என மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது.
https://www.vidyalakshmi.co.in/Students எனும் இணையதளத்தின் மூலமே அனைத்து கல்விக்கடன்களுக்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட வேண்டும்" என மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது.
*இதை எல்லா பெற்றோருக்கும், மாணவ, மாணவியர்க்கும் தெரியப்படுத்தலாம்*
பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு (Panchayat Member) விண்ணப்பிப்பது எப்படி ?
முதலில் அந்த உறுப்பினருக்கு அவர் போட்டியிடும் பகுதியில் (பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதி) வாக்காளர் அட்டை உள்ளதா என தெரிந்திருக்க வேண்டும்.
அவரை ஆதரிப்பவருக்கும் வாக்காளர் அட்டை இருக்க வேண்டும்.
பின்பு அவர் கீழ்கண்ட ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்.
- குடும்ப அட்டை
- வாக்காளர் அடையாள அட்டை*
- பான் எண்*
- வங்கி கணக்கு புத்தகம்
- நோட்டரி (notary) or சுய உறுதிமொழி பத்திரம்.
இவற்றைக்கொண்டு பஞ்சாயத்து அலுவலகத்தில் இருக்கும் தேர்தல் அலுவலரிடம் வின்னப்ப படிவத்தினை ரூ.2 (இது ஒரு தோராயமாக) பெற்று அதனை பூர்த்தி செய்து சமர்பிக்கவும்.
வின்னப்பம் பூர்த்தி செய்வதுல் சந்தேகம் இருந்தால் பஞ்சாயத்து அலுவலகத்தில் இருக்கும் தேர்தல் அலுவலரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும். தகவல்கள் தவறாக இருப்பின் அலுவலர் அதனை நிராகரிக்க செய்யலாம்.
அரசிடமிருந்து முன் அனுமதி பெற்றுத்தான் ஒரு அரசு ஊழியர் மீது மோசடி வழக்கை நீதிமன்றத்தில் தனிநபர் புகாராக தாக்கல் செய்ய முடியுமா?
என்பது குறித்து உச்சநீதிமன்றம் "இராஜேஸ்குமார் மிஸ்ரா Vs பீகார் மாநில அரசு என்ற வழக்கில் தெளிவாக விவாதித்துள்ளது.
Photo Credit - Sharda University |
அதேபோல் சென்னை உயர்நீதிமன்றம்" பிரகாஷ் பாதல் பஞ்சாப் மாநில அரசு (என்ற வழக்கில் மேற்படி உச்சநீதிமன்ற வழக்கையும் சுட்டிக்காட்டி தீர்ப்பு பத்தி 49 ல் கீழ்க்கண்டவாறு தீர்ப்பு கூறியுள்ளது.
" இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 420 மற்றும் 467,468,471 மற்றும் 120(B) ஆகிய குற்றங்களை ஒரு பொது ஊழியர் தன்னுடைய அரசு கடமையை செய்யும் பொழுது தனது அதிகாரத்தை பயன்படுத்தி செய்ய முடியும். இது போன்ற குற்றங்களுக்கு அரசிடமிருந்து கு. வி. மு. ச பிரிவு 197 ன் கீழ் முன் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை "
மேற்கண்ட தீர்ப்பின்படி ஒரு பொது ஊழியர் லஞ்சம் வாங்கியதாக கூறி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் தனிநபர் புகார்களுக்கு அரசிடமிருந்து முன் அனுமதி பெற தேவையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
கைது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் 11 கட்டளைகள்.
- கைது செய்கின்ற அதிகாரி அடையாள அட்டை பொருத்தியிருக்கவேண்டும்.
- கைது செய்தவுடன் அந்த இடத்திலே கைது குறிப்பு தயாரிக்க வேண்டும்.
- கைது செய்யப்படும் தகவலை உறவினர், நண்பர், தெரிந்தவருக்குத் தெரிவிக்க வேண்டும்.
- கைது செய்யப்பட்ட விபரம் 8 மணி முதல் 12 மணி நேரத்திற்குள் உறவினருக்கு அறிவிக்க வேண்டும்.
- தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிப்பதற்கான உரிமை உண்டு என்பதை கைது செய்யப்பட்டவருக்குத் தெரிவிக்க வேண்டும்
- காவலில் உள்ள இடத்தில் கைது விபரம், கைது குறித்தத் தகவல் தெரிவிக்கப்பட்டவிபரம் மற்றும் எந்த அதிகாரியின் பொறுப்பில் இருக்கிறார் என்ற விபரங்களை பதிவேட்டில் குறிக்க வேண்டும்…
- கைது செய்யப்பட்டவர் உடல் நிலையைப் பரிசோதித்துச் சோதனைக் குறிப்பு தயார் செய்ய வேண்டும்.
- கைது செய்யப்பட்டவரை 48 மணி நேரத்திற்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்.
- கைது செய்யப்பட்ட ஆவணங்களைக் குற்றவியல் நடுவருக்கு அனுப்ப வேண்டும்.
- கைது செய்யப்பட்டவரை விசாரிக்கும்போது வழக்கறிஞர் உடனிருக்க வேண்டும்.
- கைது பற்றிய தகவல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.
மேற்கூரியவைகள் யாவும் என்னுடைய சொந்த கருத்து அல்ல. கருத்து பெறப்பட்ட வலைதளம் மூலமாக.