நில அளவீடு செய்யும் முறை எப்படி நடக்கும்?


*அளவீடு செய்ய நினைக்கும் நிலம் மாநகராட்சிக்கு உட்பட்டதாக இருந்தால் மாநகராட்சி ஆணையரை அணுக வேண்டும். மாநகருக்கு என்று தனி* *சர்வேயர்கள் உண்டு. இதற்கு செட்டில்மென்ட் சர்வே என்று பெயர்*.
*நகராட்சிக்கு உட்பட்ட நிலம் என்றாலும் மேலே சொன்னது* *போலத்தான் விண்ணப்பிக்க* *வேண்டும்*.
*பேரூராட்சி என்றால் அதற்கு E. O எனப்படும் செயல் அலுவலரை அணுக வேண்டும்*. இங்கேயும் நில அளவையர்கள் இருப்பார்கள். இவர்களுக்கு ஸ்டீரிட் சர்வேஎன்று வழக்கத்தில் சொல்வார்கள்.
கிராமப் பகுதிகளில் என்றால் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். முன்பெல்லாம் அரசு கருவூலத்தில் பணம் செலுத்தினால் நிலத்தை அளந்து தருவார்கள். தற்போது அனைத்தும் வங்கி மயமாகிவிட்டது. வங்கியில் தான் பணம் கட்ட வேண்டும்.
ஒரு சர்வே எண்ணில் எத்தனை உட்பிரிவுகள் வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்கு ஏற்றார் போலத்தான் பணம் கட்ட வேண்டும். ஒரு உட்பிரிவுக்கு ரூ. 40/- என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்போது உங்கள் சர்வே எண் 16 என்று வைத்துக் கொள்ளுங்கள். 16ல் உட்பிரிவுகளாக 2, 3, 2A, 3A, 4A, 5A என இருக்கிறது. இந்த நிலங்கள் எல்லாம் ஒருவருக்கே சொந்தமானது என்றால், ஆறு உட்பிரிவுகளுக்கும் சேர்த்து ரூ. 240/- கட்ட வேண்டும். இதை வங்கி செல்லான் மூலம் வங்கியில் செலுத்த வேண்டும். இந்த செல்லானை கட்டாயமாக விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன், வங்கி செல்லான், கிரையப் பத்திரம், மூலப் பத்திரம், பட்டா ஆகியவற்றை இணைக்க வேண்டும். தாசில்தாருக்கு அல்லது ஆணையருக்கு அல்லது செயல் அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும். அவர் மனுவை பரிசீலித்து சர்வேயருக்கு அனுப்பி வைப்பார்.
15 நாட்களுக்குள் நிலத்தை சர்வேயர் அளந்து தர வேண்டும். அளவீடு சரியாக இருக்கிறதா? வேறு ஏதாவது பிரச்சனைகள் இருக்கிறதா? என்பதை சொல்ல வேண்டும். அதற்கு அடுத்த 15 நாட்களுக்குள் நிலத்தை பிரித்து அளந்து, அதற்கான அத்தாட்சியை சம்மந்தப்பட்ட நபருக்கு கொடுக்க வேண்டும்.
நிலத்தை அளப்பதற்கு முன்பாக சம்மந்தப்பட்ட நபருக்கும், சுற்றி இருப்பவர்களுக்கும் அறிவிப்பு கொடுக்க வேண்டும்

Madhegowdu

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.

Instagram