குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நிதி தேவைகளுக்கு அரசின் SIDBI நிதி நிறுவனம் உதவுகிறது. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியில் SIDBI முக்கிய பங்காற்றுகிறது. மத்திய அரசு தொழில்முனைவோர்களை முன்னேற்றும் வகையில் ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தை தொடங்கியது.
ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் நோக்கத்துடன் தொடர்புடையதாக SIDBI நிதி நிறுவனம் SIDBI Startup Mitra-வை தொடங்கியுள்ளது. இந்த SIDBI Startup Mitra ஸ்டார்ட் அப் நிறுவனங்களை இன்குபேட்டார் மற்றும் முதலீட்டாளர்களுடன் இணைப்பதற்காக தொடங்கப்பட்டுள்ளது.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல் கிடைப்பதும் மற்றும் முதலீடு பெறுவதும் மிகவும் சிரமமாக இருக்கும். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வளர்வதற்கு வழிகாட்டுதலும், முதலீடும் அவசியம். சிட்பியின் ஸ்டார்ட் அப் மித்ரா ஸ்டார்ட் அப் நிறுவனங்களை இன்குபேட்டார் மற்றும் முதலீட்டாளர்களுடன் இணைக்கும்.
சிட்பி ஸ்டார்ட் அப் மித்ராவில் பல்வேறு முதலீட்டு நிறுவனங்கள், ஏஞ்சல் முதலீட்டாளர்கள் மற்றும் இன்குபேட்டார்கள் இணைந்துள்ளனர். இவர்களுடன் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது. மேலும் அரசாங்க திட்டத்தின் பயன்களை பெறவும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு சிட்பி ஸ்டார்ட் அப் மித்ரா உதவுகிறது. சிட்பி ஸ்டார்ட் அப் மித்ரா திட்டம் மாநில அரசுகள் மூலம் செயல்படுத்தப்படுத்தப்படுகிறது மற்றும் நிதி உதவிகளை மாநில அரசுகளிடமிருந்து பெறுகிறது.