மன குழப்பம் Mental confusion (disorientation):-
இது பெரும்பாலும் கணினியை அல்லது தொழில்நுட்பம் (வலைதளம் தேடல் அல்லது விளையாட்டு) அதிகம் பயன்படுத்தும் அல்லது கணினி சார்ந்த வேலை செய்யும் மனிதர்களை தாக்கும் ஒருவகை மன அமைதியின்மை அல்லது மன அழுத்தம். இது சில சமயங்களில் சாதாரன கணினி அல்லது தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தாத மனிதர்களையும் தாக்கும். அது அவர்களின் வாழ்வியல் முறை அல்லது சூழ்நிலையை சார்ந்து நடக்கும்.
எ.கா - ஒரு நபரின் குடும்ப சூல்நிலை அல்லது சுற்றுச்சூழல் ஆகியன அதற்கான காரணமாக இருக்கலாம்.
அறிகுறிகள்:
- இந்த வகை மன அழுத்தத்திற்க்கு உள்ளானவர்கள் தூக்கமின்மையால் அவதிப்படுவார்கள்.
- அதிக கோபம்
- அதிக நேர கணினி அல்லது தொலைபேசி உபயோகித்தல் அல்லது தொழில்நுட்பம் சார்ந்த ஏதேனும் ஒருவகை பொருளுக்கு அடிமையாக இருத்தல்.
- பசியின்மை
- உடல் உபாதைகள்
- வயிற்றுவலி
- கண் எரிச்சல்
- தலைவலி
- கண் மங்களாக தெரிதல் அல்லது ஒரு பொருளை அல்லது ஒரு நபரை அடையாளம் காணுதலில் குழப்பம் ஏற்படுதல்.
- ஞாபகமின்மை அல்லது எழிதில் மறந்து போதல்.
- எதிலும் நாட்டமின்மை
- நம்பகத்தன்மையை இழத்தல்
- அதிக மன சிந்தனைகள்
- நிம்மதியின்மை
- பின் தலையில் வலி (இது அதிகபடியாகும் பட்சத்தில் தியானம் அல்லது மன அமைதி தரும் செயல்களை செய்தல் அதனை கட்டுப்படுத்தும்)